சுமந்திரன் - சரவணபவான் குடும்பிப்பிடி, விருப்பு வாக்குப்போர் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விருப்புவாக்களுக்காக மூன்று பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கின்றனர் என்பது யாவரும் அறிந்த விடயம். சுமந்திரன் - சிறிதரன் கூட்டு ஒரு அணியாகவும் , மாவை – சரவணபவான் கூட்டு ஒரு அணியாகவும் சித்தார்த்தன் - கஜதீபன் ஒரு அணியாகவும் விருப்பு வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளனர்.
உதயன் பத்திரிகையின் இன்றைய பிரதான தலையங்கமாக „ தமிழ் தேசியத்தைக்காக்க சுமந்திரனை தோற்கடிப்போம்" அமைந்திருந்தது. தமிழ் தேசிய நீக்கத்துக்காக துடிக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தான் ஒரு லட்சம் வாக்குகளை பெறுவேன் என தெரிவித்திருப்பது உணர்வுபூர்வமாக இப்போராட்டத்தில் கலந்து கொண்ட போராளிகளின் உணர்வுகளை அவமதிப்பதாக அமைந்துள்ளதாம் என புலிகளின் முன்னாள் உறுப்பினரான பஷீர் காக்கா என்பவர் தெரிவித்துள்ளதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று யாழ்பாணத்தில் தமிழரசுக் கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. அந்நிகழ்வுக்கு வருகைதந்தோரை இன்றைய உதயன் பத்திரிகையின் பிரதியினை இலவசமாக கொடுத்து வரவேற்றார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.
குறித்த பத்திரிகையில் சுமந்திரனுக்கு வாக்களிக்கவேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதனை அவரே முன்வந்து இலவசமாக உறுப்பினர்களுக்கு வழங்கியதன் ஊடாக உதயன் பத்திரிகையை எள்ளி நகையாடியுள்ளார். சரவணபவான் எதையும் எழுதலாம் அதை நானே மக்களுக்கு இலவசமாக கொடுக்கின்றேன். உதயனை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை என சுமந்திரன் இறுமாப்பு காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment