Sunday, July 19, 2020

கொரோனா தொற்றாளார்கள் 7 பேர் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர்!

இலங்கையில் கொவிட் - 19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2704 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 07 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த ஐவர் அதில் உள்ளடக்கம். அவர்களில் நான்கு பேர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஒருவர் லங்காபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சேனபுர புனர்வாழ்வு மையத்திலிருந்த கைதி ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றாளர் என இனங்காணப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தலில் இருந்த பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் கொவிட் -19 தொற்றியுள்ளமை இனங்காணப்பட்டுளளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com