மின்சார சபைக்கு 50 பில்லியன் ரூபாய் நிலுவையை செலுத்தியது எரிசக்தி அமைச்சு
இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய 85 பில்லியனில் 50 பில்லியன் ரூபாய் நிலுவைத் தொகையினை எரிசக்தி அமைச்சு வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் விளைவாக உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்ததால், நிதி அமைச்சின் கருவூலத்தின் கீழ் ஒரு விசேட நிதியத்தில் இருந்து பெறப்பட்ட நிதியை கொண்டு கடன் செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் முடக்க நிலைக்கு மத்தியில் மின்சார கட்டணங்களை சலுகைகளை வழங்குவைத்து குறித்து அரசாங்கம் பொருத்தமான முடிவை எட்டும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளாளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment