Monday, July 13, 2020

சேனபுர புனர்வாழ்வு மையத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று!

சேனபுர புனர்வாழ்வு மையத்தில் உள்ளவர்களில் 11 பேருக்கு கொவிட் 19 தொற்றியுள்ளதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது. தற்போது இவர்களுடன் சேர்த்து கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2642 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் உள்ளவர்களில் மேலும் 14 பேருக்கு கொவிட் தொற்றியுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது. அவர்கள் குறித்த புனர்வாழ்வு மையத்தில் பல்வேறு கடமைகளில் ஈடுபட்டு வந்தவர்களாவர்.

எவ்வாறாயினும், தற்போதைக்கு பூரண சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை 1981 என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com