ஆபிரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள இலங்கையர் 08 பேர் மலேரியாவையும் ஏந்தி வ்ந்துள்ளனர்!
ஆபிரிக்க நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ள இலங்கையர்கள் எட்டுப்பேர் மலேரியா நோயாளிகள் என்பது தெரியவந்துள்ளது.
மலேரியாத் தடுப்புத் திட்டத்தின் பணிப்பாளர் பிரசாத் ரணவீர இதுபற்றிக் குறிப்பிடுகையில், குறித்த நோயாளிகள் தற்போது தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
பெல்வெஹெர தனிமைப்படுத்தல் மையத்திலிருந்த 05 பேருக்கும் நீர்கொழும்பு வய்க்கால் பிரதேசத்திலுள்ள தனிமைப்படுத்தல் மையத்திலிருந்த 03 பேருக்கும் இவ்வாறு மலேரியா தொற்றியுள்ளதாகத் தெரியவருகின்றது.
2012 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையர் ஒருவருக்கூட மலேரியா தொற்றவில்லை என்பதுடன், வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்தோரே மலேரியா தொற்றாளர்களாகப் பதிவாகியுள்ளனர் எனவும் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
சென்றவருடம் மாத்திரம் வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கைக்கு வருகை தந்த 53 பேருக்கு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மலேரியா தொற்றுக்குள்ளானவர்கள் அதிகமாக இம்முறை இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதனைக் கருத்திற்கொண்டு, மலேரியா அபாயம் நிலவுகின்ற நாடுகளிலிருந்து வருகை தருகின்ற அனைவரையும் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

0 comments :
Post a Comment