MCC கைச்சாத்திட்டால் அந்த நிமிடமேஅரசாங்கத்திலிருந்து வௌியேறுவேன்! விமலார்
மிலேனியம் செலேன்ஞ் கோபரேசன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் அரசாங்கத்தில் தான் ஒரு நிமிடம் கூட இருக்கப் போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச குறிப்பிட்டார்.
தனது அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே விமல் வீரவங்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் கருத்துரைக்கும்போது, எம்.சீ.சீ அல்ல வேறு எந்தவொரு பெயரில் வந்தாலும் தான் அதற்கு எதிராகவே நிற்பதாகவும் இந்நாட்டு அரசியல் யாப்பிற்கும் மேலால் செல்கின்ற, நீதிமன்றிற்குக் கூட பொறுப்புச் சொல்லாத, இலங்கையில் நீதியைக் கருத்திற்கொள்ளாத ஒப்பந்தம் எந்தப் பெயரில் வந்தாலும் அதற்கு தான் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டார்.
எம்.சீ.சீ ஒப்பந்தத்துடன் தொடர்புடைய அறிக்கை நேற்று, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது. .

0 comments :
Post a Comment