கிளிநொச்சியில் காற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணக் கொடுப்பனவுகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் வீசிய கடுமையான காற்றின் காரணமாக பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிவாரண கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த வருடம் கடந்த மே மாதம் கிளிநொச்சி மாவட்டத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக 89 வீடுகள் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்திருந்தன.
இவ்வாறு பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைப்பதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 10000 ரூபா வீதம் முற்பணமாக வழங்குவதற்கான ஏற்பாட்டினை கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேற்கொண்டிருந்தது.
அந்த வகையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற நிதியினை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி வருகின்றது.
0 comments :
Post a Comment