Saturday, June 13, 2020

சுனில் ஜெயவர்த்தனவின் கொலை தொடர்பில் ஜனாதிபதியே பதில் சொல்ல வேண்டும்! - ஹரின் பெர்னாண்டோ

தேசிய முச்சக்கர வண்டிச் சங்கத் தலைவர் சுனில் ஜெயவர்தனவுக்கு என்ன நேர்ந்தது என்பதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தான் பதில் சொல்ல வேண்டும் என முன்னாள் ஜாதிக்க பலவேகயவின் தேசியப்பட்டியல் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறுகிறார்.

லீஸிங் கடன் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி நடாத்திய உரையொன்றின் காரணமாகவே, சுனில் ஜெயவர்தன வெளியே வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அனைவரையும் இந்த நடவடிக்கையை எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஜாத்திக்க பலவேக கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com