காத்தான்குடியில் அரபு எழுத்துக்களால் என்ன எழுதியிருக்கின்றார்கள் என கருணாவுக்கு விளங்கவில்லையாம்.
தமிழ் மக்களின் போராட்டத்தில் நியாயம் இருந்தது என்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்த நாட்டில் என்ன கேட்கிறார்கள் என்றும் தனக்கு விளங்கவில்லை என்று தெரிவித்துள்ளார் கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன்.
அததெரண என்ற ஊடகத்தின் „என்ன நடந்தது" என்ற நிகழ்சிக்கு கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்:
காத்தான்குடிக்கு வந்து பாருங்கள் முழுமையாக அரபில்தான் எழுதியுள்ளார்கள். அங்கு என்ன எழுதியுள்ளார்கள் என்பது எனக்கும் விளங்கவில்லை அது உங்களுக்கும் விளங்காது. இந்த விடயத்தில் நான் பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரரை மெச்சுகின்றேன். அவரது செயற்பாடுகளை 100 வீதம் வரவேற்கின்றேன்
வடகிழக்கை இணைத்தால் இரத்தஆறு ஓடுமென்று ஹிஸ்புல்லா கூறுகின்றார். அவர் யார்? றிசார்ட் பதுயுதீன் வில்பத்து காட்டை நாசம் செய்துவிட்டார். அவரது சகோதரன் சஹ்ரானை நாட்டைவிட்டு தப்பியோட உதவி செய்தவர். இன்று சொல்கின்றேன், இன்னும் 20 வருடங்களின் பின்னர் இந்த நாடு முஸ்லிம்களால் பெரிய சிக்கலை எதிர்நோக்கும்.
நான் ஒருபோதும் இலங்கை இராணுவத்தை குறைத்து மதிப்பிடவில்லை. அவர்கள் மீது பெருமதிப்பை வைத்துள்ளளேன்.
நான் ஒருபோதும் இனவாதம் பேசுவதில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே அவ்வாறான செயற்பாட்டை செய்கின்றனர். நான் யார் என்பது சிங்கள மக்களுக்கு தெரியும்.
நடைபெற்ற விடயம் ஒன்றைத்தான் நான் தேர்தல் பிரச்சாரத்திற்காக கூறினேன். அவ்விடயத்தை நாங்கள் செய்த பெரும்காரியமாக கருதி ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை.
இவ்விடயம் தொடர்பாக பிரதம மத்திரி ராஜபக்ச அவர்கள் என்மீது எந்த மனக்கசப்பும் கொள்ளவில்லை. ஆனால் சஜித் பிறேமதாஸதான் இதனை ஊதிப்பெருப்பித்தவர்.
ஆனால் அவரது தந்தையார் எங்களுக்கு ஆயிரக்கணக்கான ஆயுதங்களையும் கோடிக்கணக்கான தோட்டாக்களையும் பணத்தையும் தந்தார். இந்த கொடுக்கல்வாங்கலுக்கான பேச்சுவார்த்தைகளை அன்ரன் பாலசிங்கம் எஸ்எஸ் ஹமீட் ஊடாக மேற்கொண்டார். இந்த ஆயுதங்களை நானே மணலாறு காட்டினுள் வைத்து பெற்றுக்கொண்டேன்.
இறுதியாக நீங்கள் உண்மையில் கொரோணாவை விட ஆபத்தானவரா என்றபோது, ஐயோ! நான் சாமானிய மனிதன் என்றார் கருணா.
0 comments :
Post a Comment