தேர்தலை தொடர்ந்து பிற்போடும் நோக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடையாது. - தேஷப்பிரிய
சுகாதாரத்துறை சார்ந்த மேலதிகாரிகளின் வழிகாட்டல்களுக்கு அமைய, விரைவில் பொதுத் தேர்தலை நடத்தத் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தலை தொடர்ந்து பின்போடும் நோக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடையாது. எனினும், சுகாதார நிலைமைகள் சீரடைந்து, சட்ட ரீதியான முட்டுக்கட்டைகள் இல்லாதிருப்பின் தேர்தலை கூடிய விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திரு தேஷப்பிரிய தெரிவித்தார்.
1980 அம் ஆண்டு இலக்க 44 வாக்காளர்களை பதிவு செய்தல் சட்டத்தின் கீழ் இலங்கையில் வாக்குரிமையாளர் ஆவதற்கு தகுதிகளைக் கொண்டவர்கள் பதிவு செய்யப்படுவார்கள். இந்த சட்டத்திற்கு அமைவாக குறிப்பிட்ட தினத்தில் 18 வயதை பூர்த்தி செய்தல், ஏதாவது ஒருமுகவரியில் பதிவை கொண்டிருத்தல், இலங்கை பிரஜைக்கான ஏனைய தகுதி நீக்கங்களுக்கு உட்படாதவராக இருந்தால் வாக்காளராக பதிவு செய்வதற்கு தகுதியுண்டு என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிட்ட திகதி; ஜுன் மாதம் 1ஆம் திகதி என்பதினால் ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் முதலாம் திகதி வாக்காளர்களின் தினமாக பெயரிடப்பட்டு தொடர்ச்சியாக வைபவ ரீதியாக கொண்டாடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் வாக்காளராவதன் முக்கியத்துவம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக பல்வெறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இருப்பினும் துரதிஷ்டவசமாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலினால் அந்த வருடத்தில் ஜுன் மாதம் 1ஆம் திகதியன்று இதனை சிறப்பாக கொண்டாடுவதற்கு முடியாமல் போனது. இதே போன்று இந்த வருடத்தில் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட கொவிட் 19 தொற்று பரவவதை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக இம்முறையும் இந்த வைபவத்தை கொண்டாடுவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முடியாமற்போனது. இருப்பினும் இந்த சந்தர்ப்பத்தி;ல் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்வாங்கப்பட்டால் மாத்திரமே உங்களுக்கு வாக்களிப்பதற்கு உரிமை கிட்டும் என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன் என்றார்.
0 comments :
Post a Comment