இலங்கையின் சுகாதார சேவை உலகளாவிய ரீதியில் பெருமைப்படக்கூடிய விடயமாக இருப்பதாக பிரதமர் தெரிவிப்பு
சிறிய நாடாக இருந்தாலும் சுகாதார சேவையிலுள்ள சகலரினதும் ஒத்துழைப்பின் மூலம் இலங்கை ஒரு நாடாக பெருமையுடன் எழுந்து நின்றதாக பிரதமர் குறிப்பிட்டார்.
அதன் பொருட்டு, பலவருடங்களாக சுகாதார சேவையின் வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி, கிராமங்கள் தோறும் அதனை முன்னெடுத்த நாடாக இலங்கை திகழ்வதாக பிரதமர் கூறினார்.
மேலும், சுகாதாரத்துறையினருக்கு தமது நன்றியையும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் சுகாதார சேவை உலகளாவிய ரீதியில் பெருமைப்படக்கூடிய விடயமாக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் அபிவிருத்தியடைந்த நாடுகள் வீழ்ச்சியடைந்த பொழுதும்,
தங்காலை ஆதார வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்ட இருதய சிகிச்சைப் பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment