சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - யாழ். இராணுவ கட்டளைத் தளபதி
யாழ்.மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்
இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் அவவர் தெரிவிக்கையில் யாழ்ப்பாண குடாநாட்டை பொறுத்தவரைக்கும் சட்டவிரோதமான போதைப் பொருட்கள் விற்பனை செய்வோர் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை நாமறிந்த விடயம்தான்.
எனினும் இது தொடர்பில் பொலிசாரால் துரிதமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எனினும் பொலிஸ் எம்மிடம் உதவி கோரும் பட்சத்தில் நாங்கள் பொலிசாருக்கும் உரிய உதவிகளை உரிய நேரத்தில் வழங்கி வருகின்றோம்.
இந்த விடயங்கள் தொடர்பில் சாதாரண பொது மக்களுக்கு நிறைய தகவல்கள் தெரியும.; சட்டவிரோதமான செயற்பாடுகளை நிறுத்த வேண்டுமேயானால் பொதுமக்கள் எங்களுக்கு உரிய தகவல்களை வழங்கும் இடத்தில் நாங்கள் அதனை பொலிசாருடன் இணைந்து அதனைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையினையும் உடனடியாக எடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
...............................
0 comments :
Post a Comment