Monday, June 22, 2020

யானையின் துதிக்கையில் மொட்டு.. தேர்தலின் பின்னர் பாய்ந்துவிடும் பாரு...

யானையின் தும்பிக்கையில் தாமரை மொட்டை ஏந்தியுள்ள கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும் என தேசிய மக்கள் சபையின் ஒருங்கிணைப்பாளர் சமிர பெரேரா குறிப்பிட்டார்.

ஹட்டன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடுகின்ற அந்தக் கட்சியின் பலர் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டினால், அவர் பொது பெரமுனவுடன் சேர்ந்துகொள்வதற்கான ஆயத்தத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

9 வருடங்களின் பின்னர் இலங்கைக் கிரிக்கட் அணி 2011 ஆம் ஆண்டு, இந்தியா மற்றும் இலங்கைக்கிடையே இடம்பெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் போது காட்டிக் கொடுத்ததாக அந்நாள் விளையாட்டு அமைச்சராக இருந்த மகிந்தானந்த அழுத்கமகே, இலங்கைக் கிரிக்கட் அணியின் பிரபல விளையாட்டு வீரர்கள் சிலர் செய்த ஊழல்கள் காரணமாக தான் குற்றம் சுமத்தியதாகவும் அங்கு சுட்டிக் காட்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com