Sunday, June 21, 2020

கொரோனா குறைந்து கொண்டே செல்கின்றது....! சுகாதார அறிக்கை

சென்ற 15 நாட்களுக்குள் கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை 149 ஆக இருந்த போதும், குறித்த காலப்பகுதியில் 633 நோயாளர்கள் பூரண சுகமடைந்து, தத்தமது வீடுகளுக்குச் சென்றுள்ளனர் என சுகாதார அறிக்கை தௌிவுபடுத்துகின்றது.

அதற்கேற்ப, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட கொவிட் - 19 தொற்றாளர்கள் துரிதகதியில் குறைந்து வருவதைக் காட்டுவதோடு, நேற்றைய தினம் எந்தவொரு நோயாளியும் பதிவாகவில்லை என இன்று பிற்பகல் வௌியான அறிக்கையின் மூலம் தெரியவருகின்றது.

இங்குள்ள படமானது சென்ற மாதம் பூரண சுகமடைந்து வீடுகளுக்குச் சென்றோர் பற்றிய விபரத்தைக் காட்டுகின்றது.

இந்நேரம் வரை இனங்காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 1950 ஆக இருப்பதோடு, பூரண சுகமடைந்து வீடுகளுக்குச் சென்றோரின் எண்ணிக்கை 1498 ஆகும். அது நோயாளர்களின் எண்ணிக்கையில் 76.8 வீதமாகும். வைத்தியசாலைகளி்ல் தற்போது சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களின் எண்ணிக்கை 441 ஆக குறைந்துள்ளதுடன், அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரேயொரு நோயாளி மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றார்.

சென்ற 21 நாட்களில் நோயாளிகள் அதிகமாக இனங்காணப்பட்ட நாள் ஜூன் மாதம் 02 ஆம் திகதியாகும். மேலும் அன்றைய தினம் 79 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போது சுகமடைந்து வீடுகளுக்குச் செல்லும் நோயாளிகளின் தொகை அதிகரித்த வண்ணமே உள்ளது. இன்றும் 484 பேர் சுகமடைந்து சென்றுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com