முகமூடி விடயத்தில் அசிரத்தை காட்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை! - அஜித் ரோஹண
கொவிட் 19 தொற்று நோய் இலங்கையிலிருந்து முழுமையாக ஒழியும்வரை சுகாதாரப் பிரிவினர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்குமாறு, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
அதற்கேற்ப முகமூடியைத் தொடர்ந்து பயன்படுத்துமாறும், அதில் கூடிய கவனம் செலுத்துமாறு அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார். சுகாதாரப் பிரிவினரரின் அறிவுறுத்தல்களைக் கருத்திற் கொள்ளாமல் செயற்படுவோருக்கு எதிராக சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment