Tuesday, June 16, 2020

படகுகளில் இலங்கைக் கடலுக்கு வரவே வேண்டாம் ... வந்தால் திருப்பியனுப்புவோம்! இலங்கை அரசு

எந்தவொரு காரணத்திற்காகவும் இலங்கை கடல் எல்லையை மீற வேண்டாம் என்று அனைத்து சட்டவிரோத குடியேறியவாதிகளுக்கும் இலங்கை அரசு அறிவுறுத்துகிறது.

அண்மையில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவதை் தொடர்ந்து சிலர் கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச் செல்லத் தயாராகி வருவதாக தகவல் வெளிவந்த நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இணையத்தின் மூலம் இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது வடக்கில் பல பகுதிகளில் இரவு பகலாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தென்னிந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கையின் கடல் எல்லையை மீறும் எவரும் முன்னறிவிப்பின்றி திருப்பி விடப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com