முன்னாள் இராணுவ அதிகாரியை ஆராத்தி எடுத்து வரவேற்கும் வடக்கு பெண்கள்!
தமிழ் அரசியல் தலைமைகளின் உணர்சி அரசியலுக்கு விடைகொடுத்து அறிவுபூர்வமான முடிவினை எடுக்க வடக்கு மக்கள் முனைந்துள்ளனர். எதிர்வரும் தேர்தலில் அவர்கள் அறிவுபூர்வமாக சிந்தித்து முடிவெடுக்கப்போகின்றனர் என்பதை மல்லாவியில் வெளிப்படுத்தியுள்ளனர்.
கேணல் ரத்னபிரிய பந்து கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு தலைமையகத்தின் பிரதான அதிகாரியாக இருந்தவர். அவர் அங்கிருந்து பிரியாவிடை பெற்றபோது மக்கள் அவரை கண்ணிரால் நனைத்து தோளில் சுமத்து வழியனுப்பியிருந்தனர்.
அந்த மாற்றம் இன்று தேர்தலில் பிரதிபலிக்கவுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அவர் பொதுஜன பெருமுனவில் இம்முறை கிளிநொச்சியில் தேர்தலில் குதித்துள்ளார். கேணல் ரத்னபிரியபந்து மல்லாவி பிரதேசத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றபோது, பிரதேச மக்கள் ஆராத்தி எடுத்து வரவேற்றுள்ளனர்.
இந்த மாற்றம் தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொடுத்த மாற்றம் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
0 comments :
Post a Comment