Monday, June 22, 2020

நான் கொரோனாவை விட ஆபத்தானவன்தான். வாக்குமூலத்தில் மாற்றம் இல்லை. அடம்பிடிக்கிறார் கருணா

தமிழ் மகா சபைக் கட்சியிலிருந்து அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற கருணா அம்மான், தான் எல் ரீ ரீ ஈ அமைப்பில் உறுப்பினராக இருந்தபோது நூற்றுக் கணக்கான இராணுவத்தினரைக் கொன்றொழித்ததாகவும் அது பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும் எனவும், அதனால் தன்னை கைதுசெய்ய இயலாது எனவும் கூறியுள்ளார்.

விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற தான், கொரோனாவை விட ஆபத்தானவன் என்றும் ஒரே நாளில் சுமார் 2,000 இராணுவ வீரர்களைக் கொன்றேன் என்றும் அவர் தனது அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக இவ்வாறு கூறியுள்ளார்.

தனது அறிக்கையில் ஒருபோதும் மாற்றம் இருக்காது என்றும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.

அவர் தனது அறிக்கை தொடர்பாக அதே நிலையில் இருப்பதாக வலியுறுத்தினார்.

தன்னைக் கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி கூறியிருந்தாலும், அவர்கள் கூற்றுக்களில் பிழைகள் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார். தன்னைக் கைது செய்யவியலமைக்குக் காரணம் தான் தற்போது ஜனநாயக வழியில் இருப்பதனாலாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

எது எவ்வாறாயினும் அவர் விசாரணைக்காக சீஐடி யினரால் அழைக்கப்பட்டு தற்போது வாக்குமூலம் பதிவாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com