தேர்தல் சட்ட மீறல்கள் அதிகரிப்பு
கடந்த வாரம் தேர்தல் சட்டமீறல்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.
வாக்காளர்களிற்கான விருப்பிலக்கங்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக பவ்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகனஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 22 முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர்பல முறைப்பாடுகள் சட்டவிரோத பிரச்சாரங்கள் தொடர்பானவை என தெரிவித்துள்ளார்.
ஊழல்நடவடிக்கைகள் தொடர்பில் ஏழு குற்றச்சாட்டுகளும்,அரசவளங்கள் துஸ்பிரயோகம் தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுகளும்,சட்டவிரோத நியமனம் மற்றும் பணியிடமாற்றம் தொடர்பில் இரண்டு முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்திலிருந்து 79 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ள அவர் கொவிட் காலப்பகுதியில் இடம்பெற்ற உதவிப்பொருட்கள் விநியோகம் தொடர்பிலேயே அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வேட்பாளர்கள் தங்கள் கட்சி அலுவலகத்தில் பதாகைகள் பதாதைகள் போன்றவற்றை காட்சிப்படுத்தக்கூடாது போன்ற தேர்தல் ஆணைக்குழுவின் கட்டுப்பாடுகள் சாத்தியமற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment