Wednesday, June 24, 2020

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றியீட்டி பெற்றோலின் விலையைக் குறைப்பேன் என்கிறார் சஜித்தார்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வெற்றியீட்டி, அரசாங்கத்தை அமைத்து 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் பெற்றோலின் விலையைக் குறைப்பதாக சமகி ஜன பலவேகய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகின்றார்.

கொழும்பு - மோதரயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், உலக சந்தையில் எண்ணெய்யின் விலை குறைந்துள்ள ​போதும், இலங்கை எண்ணெய்யின் விலையைக் குறைக்காமலிருப்பது அரசாங்கத்தின் கபடத்தனமாகும். தான் அரசாங்கத்தை அமைத்ததன் பின்னர் மீண்டும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவேன். அரசாங்கம் மீண்டும் மேலெழும் வரை தற்போது வழங்கப்படுகின்ற 20000 ரூபாப் பணத்தை ஏழைகளுக்கு மட்டுமே வழங்குவேன். எக்காரணம் கொண்டும் பணக்காரர்களுக்கு அதனை வழங்க மாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com