போரா ஆன்மீகத் தலைவர் இலங்கை வருகிறார்... வழங்கப்படவுள்ளது அரச மரியாதை...
போரா முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் எனப் போற்றப்படுகின்ற கலாநிதி ஸையிதினா மஃபாதால் சைனுத்தீன் உள்ளிட்ட அவரது சீடர்கள் சிலர் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் வௌிநாட்டலுவல்கள் மேலதிகச் செயலாளர் ஜெயனாத் கொழம்பகே தெரிவிக்கின்றார்.
குறித்த ஆன்மீகத் தலைவர்களும் சீடர்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாகவும், அரச தலைவர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற மரியாதையை குறித்த ஆன்மீகத் தலைவருக்கு வழங்கி வரவேற்கும் நிகழ்வுகள் விமான நிலையத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் பின்னர் பண்டாரவளையில் அமைந்துள்ள அவர்களது விடுமுறை விடுதிக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும், கொரோனா வைரசு நீங்கும் வரை அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கவுள்ளதாகவும் ஜெயனாத் தெரிவிக்கின்றார்.

0 comments :
Post a Comment