Sunday, June 7, 2020

பெப்ரவரி முதல் வைத்தியர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு இல்லை! - வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யவும் இயலவில்லை

பெப்ரவரி மாதம் முதல் மேற்கு மாகாணத்தில் மட்டும் 3000 மருத்துவர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.

அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா கூறுகையில், கடந்த நான்கு மாதங்களாக அதிகாரிகள் இதை நினைவுபடுத்தியிருந்தாலும், இதுவரை எந்தவிதமான சந்தோசிக்கத்தக்க பதிலும் வரவில்லை.

இருப்பினும், நிலவும் கொரோனா வைரஸ் நிலைமைகாரணமாக, தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com