Thursday, June 4, 2020

வௌிச்சத்திற்கு வந்துள்ளன உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள்...!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய ஐயெஸ்ஐயெஸ் பயங்கரவாத அமைப்புப் பற்றிய தகவல்கள் ஒரு வருடத்தின்பின்பு கசிந்துள்ளது.

ஸஹ்ரான் ஹாஷிமின் உதவியாளரான இமாத் என்பவர் துருக்கியினூடாக சிரியாவுக்குச் சென்று ஐயெஸ்ஐயெஸ் செயற்பாட்டாளர்களைச் சந்தித்துவிட்டு மீண்டும் 2016 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பியுள்ளார். கைப்பற்றப்பட்ட மென்பொருள் பொறியியலாளர் ஒருவரினால் பயங்கரவாதத் தடுப்பு அதிகாரிகளுக்கு இவ்விடயம் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

50 கோடி ரூபா பணமும் ஸஹ்ரான் ஹாஷிமுக்குக் கிடைத்துள்ளதாக குறித்த மென்பொருள் பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார். இது இவ்வாறிருக்க, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலுடன் எந்தவொரு ஐயெஸ்ஐயெஸ் உறுப்பினருக்கும் தொடர்பில்லை என ஏற்கனவே இலங்கை அரசியல்வாதிகள் பலர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com