Sunday, June 14, 2020

தொழில் கற்கை நெறியின் கீழ் மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

உயர் தரத்தில் தொழில் கற்கை நெறியின் கீழ் தரம் 12 க்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்த கற்கை நெறிக்கு மாணவர்களை உள்வாங்கும் போது க.பொ.தராதர சாதாரண தரத்தில் சித்தியடைந்தமை அல்லது சித்திபெறத் தவறியமை கவனத்திற் கொள்ளப்படமாட்டாது. தாம் விரும்பும் பாடசாலையை தெரிவுசெய்து கொள்வதற்கான சந்தர்ப்பம் மாணவர்களுக்கு கிடைக்கிள்றது.

இந்த வருடம் தொடக்கம் அனைத்து மாகாண மற்றும் கல்வி வலயங்களை உள்ளடக்கிய வகையில் 423 பாடசாலைகளில் இந்த தொழில் கல்வி கற்பிக்கப்படவுள்ளது.

விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜூலை மாதம் 03 வரையில் ஏற்றுக்கொள்ப்படவுள்ளது.

இது குறித்த மேலதிக தகவல்களை 011 22787136 அல்லது 011 2786746 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலமும் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ள முடியும்


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com