அரந்தலாவ பிக்குகள் படுகொலையை கருணாவுடன் இணைந்து பிள்ளையானும் செய்தாராம்! யுஎன்பி
அரந்தலாவையில் இடம்பெற்ற பிக்குகள் படுகொலையின் பிரதான சூத்திரதாரிகளான கருணா பிள்ளையான் என்போர் பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டமைப்பின் அங்கத்தவர்களாக உள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிசன் தெரிவித்துள்ளார்.
சிங்களவன் கூறினால் அது அப்பட்டமான பொய் என எடுத்த எடுப்பிலே நிராகரித்துவந்த எம்மவர்கள் இன்று கருணா – பிள்ளையான் தொடர்பில் கூறப்படும் எதிர்மறையான கருத்துக்களை அதன் உண்மைத் தன்மை தொடர்பில் எவ்வித தேடல்களையும் மேற்கொள்ளாது பரப்புரை செய்து வருகின்றனர்.
தமிழரால் பெரிதும் ஆதரிக்கப்படுகின்ற பழமைவாய்ந்த கட்சிகள் எவ்வாறு தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றதோ, அவ்வாறே சிங்கள பழமைவாய்ந்த கட்சிகளும் சிங்கள மக்களை ஏமாற்றி வருகின்றது என்பதற்கு ஹரிசனின் மேற்படி கூற்றானது சிறந்த உதாரணமாகும்.
1987 ம் ஆண்டு ஜூன் மாதம் 02 ம் திகதி அரந்தலாவை பிரதேசத்தில் இப்படுகொலை மேற்கொள்ளப்பட்டது. இக்கொடிய தாக்குதலில் 33 பிக்குகள் மற்றும் நான்கு சிவிலியன்கள் கொலை செய்யப்பட்டனர். அரந்தலாவை பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்றை இடைமறித்த றேகன் தலைமையிலான புலிகள் அந்த பஸ்சை காடொன்றினுள் கடத்திச் சென்று அதிலிருந்த அனைவரையும் வெட்டியும் சுட்டும் கொலை செய்தனர் என்பது வரலாறு.
ஆனால் 1975 ம் ஆண்டு பிறந்து 1991 ம் ஆண்டு தனது 16 வயதில் புலிகள் இயக்கத்தின் இணைந்து கொண்டவர் பிள்ளையான் என்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன். அவரால் 1987 ம் ஆண்டு இடம்பெற்ற கொலையில் 12 வயது சிறுவனாக எவ்வாறு இணைந்து கொள்ளமுடியும் என்பதை பகுத்தறிந்துகொள்ள முடியாத எமது அரசியல் ஏதிலிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் பரப்புரையை வேதவாக்காக நம்பி தமது தேர்தல் பிரச்சாரத்திற்கு எடுத்துக்கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
0 comments :
Post a Comment