வவுனியாவில் மாணவர்களுக்கு சூம் வகுப்புகள்
வவுனியா தெற்கு வலய கல்வித் திணைக்களத்தினால் மாணவர்களுக்கான இலவச சூம் வகுப்புக்கள் நடைபெறுவதாகவும், மாணவர்களை அதற்கு வழிப்படுத்துமாறும் வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கொவிட்- 19 தாக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ள நிலையில் அவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் வடமாகாண கல்வித் திணைக்களத்தின் அனுசரணையில் வவுனியா தெற்கு வலயத்தின் ஏற்பாட்டில் க.பொ.த உயர்தரம், க.பொ.த. சாதாரணதரம், புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான இலவச சூம் வகுப்புக்கள் எந்தவித கட்டணமுமின்றி இலவசமாக வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் மாணவர்கள் பங்குபற்றுவதற்கு அதிபர்கள் வழிப்படுத்துவதுடன், பாட ஆசிரியர்களும் தமது மாணவர்களின் பங்குபற்றுதலை உறுதிப்படுத்தவும், குறித்த வகுப்புக்களில் பங்குபற்றாத மாணவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறும் வலயக் கல்விப் பணிப்பாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment