சிறைச்சாலைகள் குற்றவாளிகளின் விளையாட்டுத் திடலாக மாறியுள்ளது! - சட்டமா அதிபர்
சிறை குற்றவாளிகளுக்கான விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது என்று சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்தார்.
சிறைச்சாலை அதிகாரிகளை அவர் இன்று சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
போதைப்பொருள் மற்றும் பாதாள நடவடிக்கைகள் நடத்தப்படுவதாகவும், சிறை அதிகாரிகளால் குற்றவாளிகள் ஆதரிக்கப்படுவதாகவும் சட்டமா அதிபர் குறிப்பிட்டார்.
குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான பயிற்சிக் கல்லூரியாக சிறைச்சாலை காணப்படுவதாகவும் கைதிகளிடமும் அதிகாரிகளிடமும் ஒழுக்கம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இலஞ்சத்திற்கும் ஊழலுக்கும் அதிகாரிகள் அடிமையாகியுள்ளதாகக் கூறிய அவர், கைதிகள் குற்றங்களுக்கு அடிமையாகியுள்ளதாகத் தெரிவித்தார். முக்கிய குற்றங்கள் சிறைச்சாலைக்குள்ளேயே திட்டமிடப்படுவதாகவும் நாட்டின் சட்டத்திற்கும் அமைதிக்கும் இது அச்சுறுத்தலானது எனவும் அவர் கூறினார்.
சட்டம், அமைதி இல்லாவிட்டால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. தயவுசெய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பயப்பட வேண்டாம். சட்டத்தை மீறுவோருக்கு எதிராக ஒரு செய்தியை விடுக்கவே நான் இங்கு வந்தேன். அதிகாரிகளோ கைதிகளோ யாராக இருந்தாலும் எனக்குப் பிரச்சினை இல்லை. நான் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவேன் எனவும் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா எச்சரிக்கை விடுத்தார். ...............................

0 comments :
Post a Comment