Sunday, June 21, 2020

உயர்தரப் பரீட்சை : கல்வி அமைச்சின் செயலாளர் தலைமையில் விஷேட குழு நியமனம்!

நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி தொடர்பில் முன்வைக்கப்படும் யோசனைகளை பரிசீலிப்பதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளரும் ஏனைய மேலதிக செயலாளர்கள் இருவரும் இந்த குழுவில் அடங்குகின்றனர்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளை அதிபர்களுடாக அமைச்சிற்கு வழங்குமாறு அனைத்து வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துகள் மற்றும் யோசனைகள் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் இம்முறை உயர்தரப் பரீட்சையை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தினத்தில் நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தற்போது கிடைக்கப்பெற்றுள்ள நிலைப்பாடுகளின் அடிப்படையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதியில் பரீட்சையை நடத்த முடியும் என பல தரப்பினரும் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இம்முறை கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதிமுதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com