இந்தியாவிலிருந்து வன்னிக்கு வந்தோர் ஆர்ப்பாட்டத்தில்!
1980 ஆம் 1990 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் இந்தியாவுக்குச் சென்றுவிட்டு தற்போது நாடு திரும்பி மீள்குடியமர்ந்துள்ள பல குடும்பங்கள் தங்களுக்குரிய ஆரம்பக் காணிகளைப் பெற்றுத்தருமாறு கோரி சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா வடக்குப் பிரதேச செயலக்திற்குச் சொந்தமான கான்வூர்மொட்டைக் கிராமத்தில் மீள்குடியேறியுள்ளவர்களே இவ்வாறு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களாவர். தாங்கள் மீள்குடியேறியதிலிருந்து இதுவரை தாங்கள் பெரும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
30 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற யுத்தம் காரணமாக பாதுகாப்பு வேண்டித் தாங்கள் இந்தியாவுக்குச் சென்றதாகவும், திரும்பி வந்த குடும்பங்களில் 38 இற்கும் மேற்பட்ட குடும்பங்களது ஆரம்பக் காணிகள் இதுவரை திருப்பித்தரப்படவில்லை எனவும், தங்களுக்குரிய காணிகளை வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமானவை எனக் கூறி வருவதாகவும் குறிப்பிட்டமை தொடர்பில் இந்தப் பிரச்சினை மேலெழுந்துள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சத்தியாக்கிரகம் நடைபெற்ற இடத்திற்குச் சென்றுள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள், வனப் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களுடன் கதைத்துள்ளனர். அவர்களிடம் தாங்கள் தங்களுக்குரிய காணிகள்தான் என்பதற்குரிய எந்தவொரு ஆவணத்தையும் இதுவரை சரிவரக் காட்டவில்லையே எனக் கூறிச் சென்றுள்ளனர்.
0 comments :
Post a Comment