Sunday, June 28, 2020

முகமூடி அணியாதவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டத் தயாராகின்றது பொலிஸ் தலைமையகம்

சுகாதரப் பணிப்பாளர் நாயகத்தின் தனிமைப்படுத்தல் நோய் தவிர்த்தல் சட்டத்தின்கீழ், பொது இடங்களில் முகமூடி அணியாத தனிப்பட்ட ஒவ்வொருவரினதும் தகவல்களைச் சேகரிப்பதற்கு பொலிஸ் தலைமையகம் தயாராகி வருகின்றது.

மேற்குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர், சென்ற 25 ஆம் திகதி பொலிஸ் நிலையங்களுக்கு பொது இடங்களில் முகமூடி அணியாதவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தல் என்ற தலைப்பின் கீழ் கட்டளை பிறப்பித்துள்ளார். கடந்த சில நாட்களாக முகமூடி அணியாமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு முகமூடி அணியாதவர்களுக்கு முதலில் எச்சரிக்கை விடுத்து பின்னர் பெயர், முகவரி, நடமாடிய இடம், நேரம் என்பன பதியப்பட்டு பொலிஸ் குறிப்புப் புத்தகத்தில் பதியப்பட வேண்டும். அவ்வாறு முகமூடி அணியாதவர்கள் தொடர்பில் திரட்டப்பட்ட தகவல்களை ஒவ்வொரு நாளும் பொலிஸ் மா அதிபருக்குச் சமர்ப்பிக்கப்படவும் வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com