Saturday, June 6, 2020

ஜீவன் தொண்டமான் தேர்தல் சட்டத்தை எந்தவொரு விதத்திலும் மீறவில்லை! - பொதுஜன பெரமுண

மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமனின் மகன் ஜீவன் தொண்டமான், தனது தந்தையின் இறுதிச் சடங்கில் தேர்தல் சட்டங்களை மீறியதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பொதுஜன பெரமுண தெரிவித்துள்ளது.

அதன் பொதுச் செயலாளர் சாகர கரியவாசம் கருத்துரைக்கும்போது, ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்ட வேட்பாளராக கையெழுத்திடப்படுவதற்கு முன்பு அவரது தந்தையின் இறுதி சடங்கு நடந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜீவன் தொண்டமான் அவரது தந்தையின் மரணச் சடங்கிற்கு முன்னர் எந்தவொரு பத்திரத்திலும் கையெழுத்திடாததனால் இந்த விடயம் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஒரு வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார், ஆனால் இறுதி சடங்கு வரை வேட்பு மனுக்களில் கையெழுத்திடப்படவில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com