புலிகளின் ஆயுதக்கப்பலில் உடும்புக்கறி இறக்கப்பட்ட அபூர்வக்கதை கேளீர்! ஸ்ரான்லி ராஜன்.
பழைய கதைகளை எல்லாம் தோண்டி புலிகளை அசிங்கபடுத்தும் திருப்பணியினை தொடங்கிவிட்டார் சைமன், அவரோடு இன்னும் சிலரும் சேர்ந்திருப்பதாக தமிழக செய்திகள் சொல்கின்றன
உண்மையில் புலிகளின் தலமை சாப்பாட்டு பிரியர்கள், சென்னையில் இருந்தபொழுது அய்யர் வேடத்தில் மிலிட்டரி ஹோட்டலில் வெளுத்துவாங்கிய கிட்டு தன்னை ஈழ பிராமணன் என செய்த சாப்பாட்டு காமெடியும் உண்டு
எம்,ஜி ராமசந்திரனை புலிகள் சந்தித்த அந்த நிகழ்வில் காலை உணவுக்கு வர சொன்னார் ராம்சந்தர்
அது ராம்சந்தரை புலிகள் முதலில் சந்திக்கும் நிகழ்வு, இந்திய பயிற்சிக்கு வரமறுத்த புலிகளை இந்திரா ராம்சந்தர் எனும் தூண்டிலால் சிக்க வைத்த நிகழ்வு
இந்தியாவினை ஒதுக்கவும் முடியாமல், அதே நேரம் அதோடு சேரவும் முடியாமல் இருந்த புலிகளுக்கு அது மகா முக்கியமான விஷயம்
அப்படி ராம்சந்தர் காலையில் அழைக்க, ராம்சந்திரடம் வலு கவனமாக ஈழசிக்கலை ஆண்டன் பால்சிங்கம் எடுத்து வைக்க அங்கே, உறிஞ்சி உண்ணும் சத்தம் கேட்டது
ஆம் இருவரும் நோக்கினால் எதை பற்றியும் கவலையின்றி பொங்கல், வடை, இட்லி என உள்ளே தள்ளிகொண்டிருந்தான் பிரபாகரன்
இந்த புலமை பித்தன் இன்னும் தெளிவாக சொல்வார், சென்னையில் இருந்த பிரபாகரனுக்கு பிடித்தது கணவாய் மீன் பொறியல் அதை என் மனைவி அடிக்கடி சமைப்பார், அதை வாங்க ஓடி ஓடி வருவான் பிரபாகரன்
பிரபாகரனுக்கு தெரிந்த விஷயங்களில் அல்லது தெரிந்த ஒரே விஷயம் சமையலும் உண்பதும் என்பது அவரோடு பழகியவர்களில் பலர் சொல்வது
அந்த இயக்கம் அப்படித்தான் இருந்திருகின்றது, புலிகளின் பாடத்தில் சமையலும் உண்டு
உலகிலே போராளிகளுக்கு சமையல் சொல்லிகொடுத்த ஒரே இயக்கம் அந்த இயக்கம்தான்.
சிறையில் இருக்கும் நளினியின் வாக்குமூலபடி, தனுவும் சுபாவும் மிகசிறந்த சமையல் சமைப்பார்களாம்,
சுபாவின் சமையல் அருமையாம்
ராஜிவ் கொல்லபட்ட மறு நிமிடம் அந்த கும்பல் சாவகசமாக சிவராசன் தலமையில் திருபெரும்புதூரில் பிரியாணி தின்றதும், மறுநாள் பக்கத்து வீட்டில் வெல்லம் வாங்கி பாயாசம் வைத்ததும் விசாரணையில் தெரிந்தது
சந்திரிகா 1995ல் யாழ்பாணத்தில் இருந்து புலிகளை விரட்டியபொழுது புலிகளுக்கு உணவு தட்டுப்பாடு வந்தது, அப்பொழுது புலிகளின் ஆயுத கப்பல் ஒன்று பிடிபட்டது அது தாய்லாந்தில் இருந்து வந்தது
மிக பெரும் ராக்கெட் லாஞ்சரும் கண்ணிவெடியும் துப்பாக்கியும் இருக்கும் என சோதித்த சிங்கள படை ஆச்சரியத்தில் மூழ்கியது
காரணம் அங்கு இருந்தது உடும்பு கறி, பெட்டி பெட்டியாக இருந்தது
ஆம் இங்கு தின்றது போதாமல் கப்பல் கப்பலாக உடும்பு கறி தின்ற கூட்டம் அது
அந்த போராட்டத்தை முனியாண்டி விலாஸ் அளவுக்கு தின்று தீர்த்தார்கள் என்பது அப்பொழுதே இருந்த ஒரு விவாதம்
ஜெகத் கஸ்பர் தன் பேட்டிகளில் பிரபாகரன் தனக்கு சிங்கி இறாலை வைத்து "பாதர் சாப்பிடுங்கோ" என ஊட்டியதாக கொஞ்ச நாள் சொல்லி திரிந்தார்
திருமா கூட பிரபாகரன் கோழியினை தனக்கு ஊட்டியதாகவும் , தான் சைவம் என மறுத்ததால் "இதென்ன சைவ சிறுத்தை" என சிரித்துவிட்டு அந்த கோழியினை அவரே தின்றதாகவும் அடிக்கடி சொல்வார்
பிரபாகரனின் படத்தை உற்று பாருங்கள், பின்லேடன் யாசர் அராபத் காஸ்ட்ரோ என மற்ற போராளிகளை பார்த்துவிட்டு பிரபாகரனையும் பாருங்கள்
ஒரு ஏப்பம் உங்களுக்குள் இருந்தே வரும்
அப்படி மறைவாய் இருந்த புலிகளின் தீனி கதைகளை கிளறி புலிகள் இயக்கம் சாப்பாட்டு மடம், தின்று கெட்டவர்கள் கூடாரம் என நிரூபிக்க படாதபாடு படுகின்றார் சைமன்.
புலிகளிடம் ஒரு வழக்கம் உண்டு, தற்கொலை தாக்குதல் போராளி சாகும் முன் பிரபாகரனோடு உணவருந்துவார், பின் சென்று வெடிப்பார்
ஆக சீமானுக்கும் ஏதோ தமிழகத்தில் வெடிகுண்டு அசைன்மென்ட் கொடுக்கபட்டிருக்கலாம், பிரபாகரனோடு நன்றாக தின்றுவிட்டு வெடித்து சாகாமல் பிரபாகரனுக்கே டிமிக்கி கொடுத்துவிட்டார் அங்கிள் சைமன்.
கடைசி நேரத்தில் தனக்காக சைமன் தற்கொலை குண்டாக வெடிப்பார் என பிரபாகரன் நினைத்திருந்த பொழுது அவர் மண்டையில் கொத்து விழுந்ததுதான் சோகம்.
0 comments :
Post a Comment