Tuesday, June 9, 2020

தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்தநபர் சுருக்கிட்டுத் தற்கொலை!

ஹேரோயின் வைத்திருந்ததற்காக தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் இன்று கண்டி தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்டவர் 50 வயதுடைய சுமித் அப்போன்சு. இவர் மௌண்ட் லவ்னியாவில் வசித்து வந்தவர் என பொலிஸ் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

அவருக்கு மௌண்ட் லவ்னியா நீதிமன்றத்தின் ஆணைியின் பேரில் விளக்கமறியலில் இடப்பட்டு, கண்டியில் உள்ள பழைய போகம்பர சிறைச்சாலையின் தனிமைப்படுத்தல்மையத்திற்கு அனுப்பப்பட்டார். அந்த நபர் ஒரு அறையில் 30 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்தை பாதுகாப்பு படையினர் கண்டதாக கூறப்படுகிறது.

கண்டியில் உள்ள போகாம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட சந்தேகநபர், ஹெரோயின் பாவிக்க முடியாமையினால் தன்னுடைய சாரத்தினால் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தத் தற்கொலைக்குக் காரணம் போதைப் பொருள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதால் ஏற்பட்ட மன அழுத்தமே என விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com