உலக சந்தையில் அதிகவிலை கொண்ட பண்டம்தான் „ஜனநாயகம்" ! மஹிந்த தேசப்பிரிய
ஜனநாயகத்தை மிக எளிதில் பெற்றுக்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணையாள் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இடம்பெறவுள்ள தேர்தலுக்கான செலவுகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பில் தொலைக்காட்சி ஒன்றில் விளக்கும்போதே அவர் இதை கூறியுள்ளார்.
அவர் பேசுகையில் :
தேர்தலை நாம் சுமார் 650 கோடி ரூபா செலவினுள் நடாத்தி முடிக்க முயற்சித்தோம். தற்போது காணப்படுகின்ற கொரோணா தாக்கம் காரணமாக சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதற்கு எமக்கு மேலதிக செலவுகள் ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலை 1000 கோடி ரூபாவினுள் நடாத்தி முடிக்க முடியுமாயின் அது எமக்கு வெற்றிதான். இந்த தொகையை நாம் செலவு செய்துதான் ஆகவேண்டும். ஏனெனில் ஜனநாயகம் தான் உலக சந்தையில் காணப்படும் அதிவிலையுயர்ந்த பண்டம் என்றார்.
0 comments :
Post a Comment