எதிர்வரும் பொதுத்தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பொதுஜன பெரமுன பெற்றுக்கொள்ளும்! -எஸ்.பி
இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு 153 ஆசனங்கள் கிடைக்கும் என, நுவரெலியா மாவட்ட பெரமுனவின் வேட்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எஸ்.பீ. திசாநாயக்க தெரிவித்தார்.
அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்குமான ஆசிர்வாத பூஜை இன்று மஸ்கெலியா சமன் தேவாலயத்தில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே எஸ்.பீ. திசாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எஸ்.பீ. திசாநாயக்க தொடர்ந்து கருத்துரைக்கும்போது, ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ பெற்ற வாக்குகளை விட 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன பெற்றுக்கொள்ளும் எனவும் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment