மங்கள கையை ஆட்டிக்கொண்டு சும்மாதான் போனாரா? பரம்பரைக்கு சொத்து சேர்க்கவில்லையா? - ஜானக வக்கும்புர
முந்தைய ஆட்சியின்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தவர்களில் உழைத்து மூட்டை கட்டியவர்கள் அதிகம் பேர் இருக்கின்றார்கள். மூன்றில் இரண்டு பங்கு அரசாங்கத்தை உருவாக்க அவர்களது உதவி எங்களுக்கு எவ்விதத்திலும் தேவையில்லை என்றும் முன்னாள் இராஜங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, பலங்கொடையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துரைக்கும்போது,
ஐக்கிய தேசியக் கட்சியின் திருடர்களைச் சேகரிக்காமல்மூன்றில் இரண்டு அரசாங்கத்தை உருவாக்க எங்களால் முடியும். நாங்கள் எக்காரணம் கொண்டும் அந்தக் கட்சியில் சேர மாட்டோம். கோத்தாபய ராஜபக்ஷவை நாங்களே வெற்றி பெறச் செய்தோம்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தொடர்பில் அவர் குறிப்பிடுகையில் ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடும் போது, இந்த நாட்டில் வலுவான எதிர்ப்பை உருவாக்க முடியாது என்று மங்கள குறிப்பிடுகின்றார். அதனால் அவர் தேர்தலில் போட்டியிடாமல் தான் விலகிக் கொள்வதாக ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு அறிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவர்களில் இருவருக்குமே எதுவும் செய்ய முடியாது என்பது அவருக்கு நன்கு தெரியும். பிறருக்கு குறைசொல்லும் அவரும் கையை ஆட்டிக்கொண்டுதான் வீட்டுக்குச் சென்றாரா? அனைத்துச் சலுகைகளுடன்தான் வீட்டிற்குச் சென்றார். ரணில் - சஜித் இருவரினதும் இரு கட்சிகளும் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்துள்ளன.
எனவே, வாக்காளர்கள் ஏமாறாமல் மொட்டுக்கட்சியுடன் சேருமாறு கேட்டுக்கொள்கின்றேன். கொள்ளையடிக்கும் அந்த அமைச்சர்களை விட, கிராமங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த நல்லோர்கள் நிறையப்பேர் இருக்கின்றார்கள். நாங்கள் ஒன்றிணைந்தால் அத்தகையவர்களைப் எங்களுடன் இணைத்துக்கொள்வோம் என்றும் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

0 comments :
Post a Comment