Wednesday, June 10, 2020

நாகபூசணி அம்மன் ஆலய உற்சவம் : அப்பகுதி அடியவர்களுக்கு மட்டுமே அனுமதி

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தில் நயினாதீவு பகுதியிலுள்ள அடியவர்கள் மட்டுமே கலந்து கொண்டு குறித்த உற்சவத்தில் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் அன்னதானத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இம்மாதம் 20 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து தொடர்ந்து 18 நாட்கள் இடம்பெறவுள்ளது.

குறித்த ஆலய வருடாந்த மகோற்சவத்தில் இவ்வருடம் நயினாதீவு பகுதியிலுள்ள அடியவர்கள் மட்டும் கலந்து கொண்டு குறித்த உற்சவத்தில் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com