போதைப்பொருள் சட்டதிட்டங்களில் மாற்றம்
நாட்டில் கடந்த 7 மாத காலத்தில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய சுமார் 44 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இத்தகைய குற்றங்களைக் குறைப்பதற்கு, உரிய சட்டதிட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும், சட்டங்களை இறுக்கமாக்குவதன் ஊடாக போதைப்பொருட்களற்ற ஒரு இலங்கையைக் கட்டியெழுப்புவது இதன் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்ட போதே பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைக் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment