Friday, June 5, 2020

சந்தேகநபர் பொலிஸாரைச் சுட பொலிஸார் சந்தேக நபரைச் சுட்டுச் சாய்த்தனர்! மொனராகலயைில் என்ட்கவுண்டர்!

இன்று பிற்பகல் மொனராகல நகரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சந்தேகநபர் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையிலான சண்டை முற்றியபோதே இந்த சந்தேகநபர் கொல்லப்பட்டுள்ளார். கொலை ஒன்றைச் செய்தமை தொடர்பாக சந்தேக நபரை கைது செய்யச்சென்றபோது சந்தேக நபர் பொலிஸாருக்குத் துப்பாக்கிச் சூடு நடாத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் சந்தேகநபருக்கு துப்பாக்கிச் சூடு நடாத்தியதன் காரணமாக பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சந்தேக நபர் இறந்துள்ளார்.

சந்தேக நபர் ஏற்கனவே ஒரு கொலை செய்தமை தொடர்பில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com