Monday, June 1, 2020

மரக்கறி மற்றும் பழ வகைகளை இனி புகையிரதங்களில் கொண்டு செல்வதற்கு வாய்ப்பு

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் அரிசி, பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளை ஏனைய பிரதேசங்களுக்கு போக்குவரத்துச் செய்வதற்கு ரயில்களை பயன்படுத்த தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளருடன் கலந்துரையாடியுள்ள அமைச்சர் அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு ரயில்வே பொது முகாமையாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர் மரக்கறி, பழங்கள் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களை போக்குவரத்து செய்வதற்காக விவசாயிகள் பெருமளவு பணத்தை செலவிடுவதுடன் அவை பழுதடைவதற்கும் அது காரணமாகின்றது.

ரயில்களில் அவற்றை போக்குவரத்து செய்யும்போது பெருந்தொகையான பழங்கள் மற்றும் மரக்கறிகளை ஒரே தடவையில் கொண்டுசெல்ல முடியும் என்பதுடன் பழுதடைவதையும் தவிர்த்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com