மன்னார் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 842 பேர் வாக்களிக்க தகுதி
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 842 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆவணி மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது. மன்னார் மாவட்டத்தில் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் முக்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மன்னார் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை ஜனநாயக ரீதியிலும் சுகாதார முறைப்படி நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இம்முறை மன்னார் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 842 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பிற்கு 4 ஆயிரத்து 259 விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 6 ஆசனத்தை பெற்றுக்கொள்ள 17 கட்சிகளும் 28 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.
அத்துடன் குறித்த தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 405 வேட்பாளர்கள் போட்டியிடுகிறனர். மேலும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு அலுவலகமானது மாவட்டச் செயலகத்தில் விசேட அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலானது ஜனநாயக ரீதியில் சுகாதார முறைப்படி நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் மேலும் கோரிழயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment