Saturday, June 27, 2020

4000 இற்கும் அதிகமான காணிகள் போலி ஆவணங்கள் தயார்செய்து விற்பனை!

கொழும்பு பாதாள உலக கும்பல்கள் 4,000 அதிகமான பல கோடிகள் பெறுமதியான காணிகளை போலி ஆவணங்களைச் செய்து விற்றுள்ளதை அரசாங்கம் கண்டறிந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினருக்கு ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன.

பாதாள உலக கும்பல்களை அடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. கொழும்பு 7 இல் இரண்டு பில்லியன் ரூபாய் மதிப்புள்ள காணியொன்று பாதாள உலக கும்பலால் போலி ஆவணம் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வெளியீட்டுப் பத்திரங்களில் மதிப்புமிக்க நிலத்தை விற்கும் புகைப்படங்கள் கொழும்பு, மஹரகம, தலவத்துகொட மற்றும் ஹோகந்துர பட்டரமுல்ல போன்ற நகர்ப்பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com