Tuesday, June 9, 2020

29 ஆம் திகதியிலிருந்து பாடசாலைகள் ஆரம்பம்... நேரசூசி இதோ...!

இம்மாதம் 29 ஆம் திங்கட்கிழமை முதல் பாடசாலைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில் 4 கட்டங்களாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 13, 11 மற்றும் 05 ஆம் வகுப்புகள் எதிர்வரும் பள்ளிகள் ஜூலை மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகும். ஜூலை 20 ஆம் திகதியிலிருந்து 24 ஆம் திகதிவரை 10 ஆம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்படவுள்ளனர்.

தரம் 3, 4, 6, 7, 8, 9 ஆம் தர வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 27 ஆம் திகதி நான்காவது கட்டமாகப் பாடசாலை தொடங்கப்படவுள்ளது. இருப்பினும், முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடசாலை தொடங்கும் திகதி பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளில் வகுப்புக்கள் நடைபெறும் காலப் பிரிவுகள்:
தரம் 3-4 -- 07.30 முதல் 11.30 வரை
தரம் 5 - -07.30 முதல் 12.00 வரை
6-9 -- 7.30 முதல் 1.30 வரை
தரம் 10-13 -- 7.30 முதல் 3.30 வரை

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com