Friday, June 26, 2020

180 கோடி ரூபாவுக்கும் என்னதான் நடந்தது? ஐதேக தலைவர்கள் தௌிவுறுத்த ​வேண்டும்! கிரியெல்ல

MCC ஒப்பந்தங்கள் இரண்டில் கைச்சாத்திட்டு, பெற்றுக்கொண்ட 180 கோடி ரூபாவுக்கும் என்னதான் நடநதது? என்பதை முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் தலைவர்கள் தௌிவுறுத்த வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத்திற்கான வேட்பாளர் பேராசிரியர் வன்ன ஜயசுமன குறிப்பிடுகின்றார்.

அநுராதபுர இப்பலோகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்பதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

MCC ஒப்பந்தம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவம் அங்கு கருத்துரைத்தார். அவர் உரையாற்றும்போது, “MCC ஒப்பந்தம் தொடர்பில் அறிக்கையினை வெளியிடுமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். ஏன் என்றால் அந்த அறிக்கையைப் படித்து நாங்களும் தேவையான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com