நாடாளுமன்ற தேர்தலுக்காக 18 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நிறைவு!
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக 18 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை 11 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 25 ஆம் திகதி வீடுகளில் காட்சிப்படுத்தப்படும் பத்திரங்களை அச்சிட்டு முடிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் வாக்களிக்க பிரத்தியோக வாக்களிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வடக்கில் தேர்தல் பணிகளில் ஈடுப்படவுள்ள ஊழியர்களை தெளிவுப்படுத்தும் சந்திப்பில் அவர் இதனை கூறினார். வானொலிகள், தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் பணம் கொடுத்து செய்யப்படும் விளம்பரங்களை தனக்கு தடுக்க அதிகாரம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே வானொலிகள், தொலைக்காட்சிகள் போன்றவற்றில் ஒளி, ஒலிபரப்பாகும் செய்திகளில் வேட்பாளர்களுக்கு சம அந்தஸ்த்து வழங்குமாறும் கேட்டுள்ளார்.
0 comments :
Post a Comment