Saturday, June 6, 2020

கல்முனை பிராந்தியத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 173 பேர் கைது

கல்முனை பிராந்தியத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் அனர்த்தத்தை தொடர்ந்து பொதுமக்கள் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டிய முறைகள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் அனர்த்தத்தை தொடர்ந்து பொதுமக்கள் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டிய முறைகள் மற்றும் அவசியம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தின் சமூக பாதுகாப்பு பொலிஸ் பிரிவினரால் ஒலிபெருக்கிகள் மூலம் தொடர்ந்தும் பொதுமக்களுக்கு அறிவூட்டல் மற்றும் விழிப்புணர்வுகளை வழங்கி இருந்த போதிலும் இவ்வாறு ஊரடங்கு சட்டத்தை மீறியவர்கள் கைதாகியுள்ளனர்.

இது தவிர பள்ளிவாசல்கள் கோயில்கள் ஊடாகவும் ஏலவே நாம் ஊரடங்கு சட்டம் குறித்த அறிவித்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.

அத்துடன் போக்குவரத்து சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 67 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் கொரோனா காலங்களில் எமது பிராந்தியத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் உற்பத்தி மற்றும் கஞ்சா அதிகரித்த நிலையிலும் சந்தேக நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளோம் என குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com