Wednesday, June 17, 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 139 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் அங்கவீனமடைந்துள்ளவர்கள் மற்றும் படுகாயங்களுக்குள்ளானவர்களை அரசாங்கத்தின் செலவில் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆஸ்பத்திரியில் தொடர்ந்தும் சிகிச்சைகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த சிகிச்சைகளுக்கான அனைத்து செலவுகளையும் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் சுகாதார அபிவிருத்தி நிதியின் ஊடாக செலவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

படுகாயங்களுக்கு உள்ளானவர்களில் 139 பேர் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 39 பேர் நீண்டகால விஷேட மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களென வைத்தியர்கள் சிபாரிசு செய் துள்ளனர். அவர்களுக்கு விசேட சிகிச்சை நடைமுறையொன்றை மேற்கொள்ள வேண்டுமென விசேட மருத்துவ நிபுணர்களும் டாக்டர்களும் பேராயர் கர்தினால் மெல்கம்ரஞ்சித் ஆண்டகையிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக நேற்றைய தினம் சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி பேராயரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த தீர்மானத்துக்காக பேராயர் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com