Saturday, June 6, 2020

04 கோடி ரூபாவுக்கு மருத்துவப் பட்டம்! வீதியில் இறங்கியுள்ளது அ.ப. மாணவர் ஒன்றியம்

தற்போதைய அரசாங்கம் மருத்துவ பட்டத்தை நான்கு கோடி ரூபாவுக்கு விற்க முயற்சிப்பதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சாட்டுகிறது.

எல்லா தடைகளுக்கும் மத்தியில் தாங்கள் வீதிகளில் இறங்கத் தயாராக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். மாணவர் ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிவிப்பாவது,

ஆஸிரி மருத்துவமனை, ஸ்காட்லாந்தின் அபெர்டீன்பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒரு தனியார் மருத்துவப் பாடசாலையொன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. அபெர்டீன் இணையத்தளத்தின்படி, இது செப்டம்பரில் தொடங்கப்பட உள்ளது. முதல் மூன்று ஆண்டுகள் ஸ்காட்லாந்தில் வகுப்புக்களை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இறுதி இரண்டு ஆண்டுகள் இலங்கையின் ஆஸிரி மருத்துவமனைகளில் நடத்தப்படும். ஸ்காட்லாந்தில் யார் வேண்டுமானாலும் பட்டம் முடிக்க முடியும். ஸ்ரீ லங்கன் பாத்வே முறைமைக்கு ஏற்ப, இந்த பட்டத்திற்கான கட்டணம் ரூபா. 3.6 மில்லியன் ஆகும். ஸ்காட்லாந்தில் ஒரு பட்டப்படிப்பை முடிப்பதற்கு ரூபா .6.5 பில்லியன் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com