ரிஸ்வானின் மரணத்திற்கு பொலிஸார் இறுதி மரியாதை செலுத்தினர்! (video)
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்றி தமிழ்ப் பெண்மணியின் உயிரைக் காப்பற்றப்போய், தன் உயிரைப் பலிகொடுத்த ரிஸ்வானின் சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வீட்டுக் கொண்டுவரப்பட்ட சடலத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் வருகைதந்து தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர். மேலும் பெளத்த மதகுருமார்கள் பலரும் ரிஸ்வானின் உடலைப் பார்ப்பதற்காக அங்கு வருகை தந்துள்ளனர்.
குறித்த பெண்ணை நீரிலிருந்து காப்பாற்றிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ருவன் பண்டார அவர்களுக்கு ஊர்மக்கள், இளைஞர்கள் மற்றும் பலரும் தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்கொலை முயற்சிக்கு முயன்ற பெண்ணைச் சந்தித்துள்ள பாெலிஸ் அதிகாரி ருவன் பண்டார குறித்த பெண்மணிக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

0 comments :
Post a Comment