கோட்டாவின் வர்த்தமானி இரத்தாகும்: தெரிந்தே பிழை செய்தார் என்கிறது TNA..
நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்ட வர்;த்தமானி அறிவித்தல் வருகின்ற ஜுன் 02ஆம் திகதி செல்லுபடியற்றதாகிவிடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
ஏப்ரல் 25ஆம் திகதி எப்படியும் பொதுத் தேர்தலை நடத்திவிட முடியாது என்பதை முன்கூட்டியே தெரிந்திருந்தும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை மார்ச் 2ஆம் திகதி கலைத்தார் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
ராவய பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்தக் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
அவ்வாறு ஜனாதிபதியின் வர்த்தாமானி அறிவித்தல் இயல்பாகவே ரத்தாகிவிட்டால் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கலைக்கப்படாத நாடாளுமன்றமாகவே அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2018ம் ஆண்டிலும் இதே நிலைமையே அரசியலமைப்பின் ஊடாக ஏற்பட்டது என்பதையும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
எவ்வாறாயினும் பொதுத் தேர்தல் திகதியை அவசர நிலையைக் கருத்திற்கொண்டு எந்த மற்றும் எத்தனை சந்தர்ப்பங்களிலும் ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முடியும் என்பதே இன்று ஏற்பட்டிருக்கம் வியாகுலமான நிலைமை என்று அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment